களனி பல்கலை 4ஆம் வருடம்; ஜூலை 13 ஆரம்பம் | தினகரன்

களனி பல்கலை 4ஆம் வருடம்; ஜூலை 13 ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் விடுக்கப்பட்டுள்ள  அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ கற்கைநெறிகள், கணனி மற்றும் தொழில்நுட்ப பீடங்களுக்கான நான்காம் வருட மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த பீடங்களைச் சேர்ந்த விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் அனைவரும், எதிர்வரும்12ஆம் திகதி காலை 9.00 மணி முதல், மாலை 5.00 மணிக்குள் விடுதிகளுக்கு வருகை தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...