ஐ.பி.எல். நடத்த வாங்க; நியூசிலாந்து அழைப்பு

இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியத்தை தொடர்ந்து ஐ.பி.எல்., தொடரை நடத்த வருமாறு நியூசிலாந்து கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 13வது சீசன் கடந்த மார்ச் 29ல் துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள (அக். 18 – நவ. 15) ஐ.சி.சி., ‘ரி–20’ உலக கிண்ணம் ஒத்திவைக்கப்பட்டால், ஐ.பி.எல்., தொடர் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில்   இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைகள், 13வது ஐ.பி.எல்., தொடரை தங்கள் மண்ணில் நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன. 

இந்நிலையில் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் சபையும் இத்தொடரை நடத்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டு முறை ஐ.பி.எல்., தொடர் தென் ஆபிரிக்கா (2009), ஐக்கிய அரபு இராச்சியம்., (2014) நாடுகளில் நடத்தப்பட்டிருந்தது.இதுகுறித்து 

பி.சி.சி.ஐ., சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 13வது ஐ.பி.எல்., தொடரை இந்தியாவில் நடத்த முன்னுரிமை அளிக்கப்படும். ஒருவேளை கொரோனா பாதிப்பு குறையவில்லை என்றால் பாதுகாப்பு காரணங்களுக்கான வெளிநாடுகளில் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். இலங்கை, ஐக்கிய அரபு இராச்சிய நாடுகளுக்கு பின், தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் போர்டும் இத்தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அணி உரிமையாளர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசிக்கப்படும். வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இதில் வேறு எந்த சமரசமும் இருக்காது,’’ என்றார்.   


Add new comment

Or log in with...