OPPO கம்பியற்ற ஒலிப் புரட்சி; 3 வகை ஹெட்போன்கள் அறிமுகம் | தினகரன்


OPPO கம்பியற்ற ஒலிப் புரட்சி; 3 வகை ஹெட்போன்கள் அறிமுகம்

OPPO கம்பியற்ற ஒலிப் புரட்சி; 3 வகை ஹெட்போன்கள் அறிமுகம்-OPPO Launches IOT Devices

OPPO இலங்கையில் மூன்று புதிய ஹெட்போன் மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது: OPPO Enco Free, OPPO Enco W31, OPPO Enco M31 ஆகிய. இந்த 3 "புதுமையான, உயர்தர தயாரிப்புகள், இலங்கை நுகர்வோருக்கு சிறந்த பயனர் அனுபவங்களை கொண்டு வருவதற்கான" OPPO இன் பணியின் ஒரு பகுதியாகும்.

OPPO Enco Free: "உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சரியான ஜோடி"
OPPO Enco Free ஹெட்போன்கள் ஆனது, OPPO ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் என்பதையும் தாண்டி, 2019 ஆம் ஆண்டில் IoT வணிகத்தில் நுழைந்ததிலிருந்து அது வழங்கும் முதலாவது கம்பியற்ற ஓடியோ தயாரிப்பு ஆகும். இது அதன் தரக்குறியீட்டிலுள்ள ஹெட்போன்களில் ஸ்மார்ட்போன்களுடன் மிக ஒத்திசையும் ஒன்றாக அமைந்துள்ளது.

ஹெட்போன்கள், இரு பக்க குறைந்த தாமத ப்ளூடூத் சமிக்ஞை வௌயீட்டை (binaural low-latency Bluetooth transmission) பயன்படுத்துவதோடு, இங்கு 120 மில்லி செக்கன் (120ms) எனும், தொழில்துறையிலேயெ மிகக் குறைவான அளவீட்டை (Reno 3 Pro 5G இனை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வகத் தரவு) கொண்டுள்ளது. குறைந்த சமிக்ஞை வெளியீட்டுத் தாமதம் ஆனது, அதிக ஓடியோ-வீடியோ ஒத்திசைவு மற்றும் குறைந்த இணைப்பு குறுக்கீட்டுக்கு ஏற்றவாறு அமைக்கிறது. இந்த ஹெட்போன்கள், சந்தையில் உள்ள எந்தவொரு ஸ்மார்ட்போனுடனுடனும் இணைந்து செயற்படக்கூடியனவாக உள்ளன.

ஓடியோ தரத்தைப் பொறுத்தவரை, OPPO Enco Free ஆனது, தொழில்துறையில் அல்ட்ரா-டைனமிக் ஸ்பீக்கர்களுடன் பதிக்கப்பட்ட முதலாவது நிகர் உண்மையான வயர்லெஸ் ஹெட்போன்கள் ஆகும். 13.4 மிமீ டைனமிக் ஸ்பீக்கர்கள் ஆனது, இரட்டை காந்த சுற்றுகள் மற்றும் ஒரு FPC நெம்புகோலைப் பயன்படுத்துகின்றன. இவை பொதுவாக உயர்நிலை முழு அளவிலான ஸ்பீக்கர்களுக்காக ஒதுக்கப்படும் தொழில்நுட்பங்களாகும். கனமான ட்ரம் பீட்ஸ் (drumbeats) மற்றும் அதி திறனான தாழ்வு நிலை ஒலிகளை துல்லியமாக மீளமைப்பு செய்து வழங்கப்படுவதை உறுதி செய்கின்றன. இந்த ஹெட்போன்களில் மற்றொரு தொழிற்துறை முதன்முதல் சிறப்பம்சமான, அவற்றின் மக்னலியம் - தைத்தேனியம் (magnalium-titanium) கலப்பு பிரிதகடுகளை கூறலாம். இந்த அம்சங்களனைத்தும் பிரித்தறியக்கூடியதும் சக்திவாய்ந்ததுமான ஓடியோ அனுபவத்தை வழங்குகின்றன.

அழைப்புகளின் போது குரல் பரிமாற்றத்தின் தெளிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஹெட்போன்களில் இரட்டை மைக்ரோபோன் கற்றை உருவாக்கல் மற்றும் ஆழமான புரிந்து அறிதல் அடிப்படையிலான AI இரைச்சல் குறைப்பு வழிமுறையை OPPO இணைத்துள்ளது. இந்த தொழில்நுட்பங்கள், பயனர்களின் குரலை வேறுபடுத்தி அதை தெளிவாக கடத்தக்கூடியது என்பதுடன், சூழவுள்ள ஏனைய அனைத்து சத்தங்களையும் தடுக்கின்றன. OPPO Enco Free ஆனது வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கிறது.

OPPO Enco W31: "இசையின் சக்தியை கட்டவிழ்த்து விடுங்கள்"
OPPO Enco W31 ஹெட்போன்கள் மிகவும் சிக்கனமான மாற்றீடாக காணப்படுகின்றது. இரு பக்க குறைந்த-தாமத புளூடூத் சமிக்ஞை வெளியீட்டைப்  (binaural low-latency Bluetooth transmission) பயன்படுத்துவதோடு, பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து செயற்படக்கூடியனவாக உள்ளன. அது தவிர, அதிக காதில் பாதுகாப்பானதும், வடிவமைப்பு, வலுவான நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், இந்த ஹெட்போன்கள், ‘மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆற்றல்மிக்க பயனர்களைக்கானதாக’ அறிமுகப்படுத்தப்படுகின்றன.

OPPO Enco W31 ஹெட்போன்கள், இரட்டை கலப்பு தெர்மோபிளாஸ்டிக் பொலியூரிதீன் (TPU) மற்றும் அதிர்வெண் பதிலீட்டை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கிராபென் பிரிதகடுகளைக் (graphene diaphragms) பயன்படுத்துகின்றன. இதில் பொப் மற்றும் கிளாசிக்கல் (pop and classical) ஆகிய இரண்டு ஓடியோ பயன்முறைகள் கிடைப்பதோடு, இது அதிர்வெண் வரையறைக்கு அப்பால் ஓடியோவை சமனிலைப்படுத்துகிறது. rock and EDM பயன்முறையில், குறைந்த அதிர்வெண்களை மேம்படுத்தும் பேஸ் பயன்முறையாகும் (Bass mode).

இது தவிர, ஹெட்போன்களில் எதிர் காற்று எதிர்ப்பு இரைச்சல் அறைகள், ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு உள்ளார்ந்த உயர் உணர்திறன் கொண்ட மைக்ரோபோன்கள் மற்றும் அழைப்புகளின் போது பின்னணி இரைச்சலைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட சூழல் சத்தம் இரத்துச் செய்தல் வழிமுறை ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன. OPPO Enco W31 ஆனது வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கிறது.

OPPO Enco Q1 ஹெட்போன்களை அடுத்து, OPPO Enco M31 ஹெட்போன்கள் ஆனது OPPO இன் இரண்டாவது நெக் பேண்ட் பாணியில் (neckband-style) அமைந்த வயர்லெஸ் ஹெட்போன்கள் ஆகும். இந்த ஹெட்போன்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட ஒலி சார் தயாரிப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

OPPO Enco M31 ஹெட்போன்கள் அவற்றின் விலை வரம்பிற்குட்பட்ட ஹெட்போன்களில் முதலாவது உயர் மட்ட வயர்லெஸ் (High-Res Wireless) சான்றிதழைக் கொண்டுள்ளன. Bluetooth 5.0 மற்றும் 990kbps வரையான பரிமாற்ற வேகத்தை இயக்கும் LDAC இனை கொண்டுள்ளன. ஓடியோ தரம் 9.2 மிமீ முழு அளவிலான டைனமிக் ட்ரைவர்கள். PET தைத்தேனினியம் கலப்பு பிரிதகடுகள் மற்றும் சுயாதீன Bass அறைகள் ஆகியவற்றின் மீது தங்கியுள்ளது. இதன் விளைவாக வரும் ஓடியோவானது, முழு அதிர்வெண் வரம்பிலும் (full frequency range), தெளிவான உயர் அதிர்வெண்கள் (clear high frequencies), உயர்ரக இடைப்பட்ட அதிர்வெண்கள் (rich mid-range frequencies), பலம் வாய்ந்த குறைந்த அதிர்வெண்கள் (powerful low frequencies) ஆகிய நிலைகளில் சமநிலையில் அமைகின்றது.

அழைப்புகளின் போது பின்னணி இரைச்சலைக் குறைக்கும் நோக்கம் கொண்ட AI வழிமுறையையும் இந்த ஹெட்போன்கள் கொண்டுள்ளன.

OPPO Enco M31 ஹெட்போன்களின் நெக் பேண்ட் ஆனது, வடிவத்தை நினைவகத்தில் கொண்ட (மீள்வடிவம் பெறும்) திரவ சிலிகோன் இறப்பரினால் மூடப்பட்ட உலோகத்தை கொண்டுள்ளது. இந்த ஹெட்போன்கள் கறுப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கின்றன.

இந்த மூன்று ஹெட்போன் தயாரிப்புகளும் ஜூன் 15 முதல் இலங்கையில் கிடைப்பதோடு, ரூபா 9,900 எனும் விலையிலிருந்து கிடைக்கின்றன. “இந்த ஹெட்போன்கள், தொழில்நுட்பம் மற்றும் அழகியலில் OPPO வழங்கும் சிறந்த உற்பத்தியைக் குறிக்கின்றன" என, OPPO இலங்கையின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவிக்கிறார். "இது இலங்கை சந்தைக்காக, நாம் மனதில் கொண்டுள்ள அற்புதமான விடயங்களின் ஒரு சுவை மாத்திரமேயாகும்." என அவர் கூறுகிறார்.


Add new comment

Or log in with...