ஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

ஆற்றிலிருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு-2 Bodies of Male Found in a River

பொலிஸாரின் அவசர அழைப்பு இலக்கத்திற்கு (118) கிடைத்த தகவலுக்கமைய, இன்று (08) காலை 7.10 மணியளவில், இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெல்மதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கணேகம பிரதேசத்திலுள்ள தெனவக்க ஆற்றில் இரு சடலங்கள் காணப்படுவதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், பெல்மதுளை நீதவானினால் மரண விசாரணை இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், பெல்மதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...