2020 பொதுத் தேர்தல்: பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்கூடம் | தினகரன்


2020 பொதுத் தேர்தல்: பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்கூடம்

2020 பொதுத் தேர்தல்: பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்கூடம்-Special Operation Centre at Police HQ for General Election

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக, பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டுக் கூடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 01ஆம் திகதி முதல் இது செயற்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை, இச்செயற்பாட்டு கூடத்திற்கு வழங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த செயற்பாட்டுக் கூடத்தை தொடர்பு கொள்ள

உடனடி தொலைபேசி இலக்கங்கள்1933/ 011-2472757
ஏனைய தொபேசி இலக்கங்கள்: 
011-5978701 011-5978702
011-5978703 011-5978714
011-5978719 011-5978721
011-5978722 011-5978737
பொலிஸ் தலைமையகம் ஊடாக:  011-2421111/ நீட்சி 3051
தொலைநகல் இலக்கங்கள்:
011-2345553
011-2327706
011-2440433
கையடக்கத் தொலைபேசி: 0718592717
மின்னஞ்சல் முகவரி: [email protected]


Add new comment

Or log in with...