வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு-Northern Train Service Back to Normal-Train Derailment

வவுனியாவில் இன்று (08) அதிகாலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஈரப்பெரியகுளம், புனாவை எல்லை பகுதியில் தடம் புரண்டதையடுத்து புகையிரதப்பாதை சீரமைப்புப்பணிகள் மற்றும் தடம் புரண்ட புகையிரத பெட்டிகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று பிற்பகல் 2.30 மணியளவில் வடக்கிற்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

இன்று (08) காலை வவுனியாவில் இருந்து அதிகாலை கொழும்புக்கு சென்ற கடுகதி புகையிரதம் ஈரப்பெரியகுளம் பளாவை எல்லைப்பகுதியில் புகையிரதப்பாதையைவிட்டு விலகி தடம் புரண்டுள்ளது . இதையடுத்து தடம் புரண்ட பகையிரதப் பெட்டிகளை கழற்றிவிட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணி நேரத்தின் பின்னர் புகையிரதம் கொழும்பு நோக்கி தனது சேவையை மேற்கொண்டது .

வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு-Northern Train Service Back to Normal-Train Derailment

இந்நிலையில் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் புகையிரத அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்து இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதங்கள் அனைத்தும் வவுனியா புகையிரத நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதங்கள் மதவாச்சி புகையிரத நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்து.

வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு-Northern Train Service Back to Normal-Train Derailment

எனினும் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பகையிரதப்பாதைகள் சீரமைக்கப்பட்டு தடம் புரண்ட புகையிரத பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு வடபகுதிக்கான புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு-Northern Train Service Back to Normal-Train Derailment

(வவுனியா நிருபர் - பாலநாதன் சதீஸ்)

Add new comment

Or log in with...