வாகனங்களை மீள ஒப்படைக்காத அமைச்சர்களுக்கு சட்டநடவடிக்கை | தினகரன்


வாகனங்களை மீள ஒப்படைக்காத அமைச்சர்களுக்கு சட்டநடவடிக்கை

அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்களை இதுவரை உரிய அமைச்சிடம் கையளிக்காத அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடமுள்ள 13 வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படாமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதற்கிணங்க 11 வாகனங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாகனங்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் குறித்த அமைச்சிடம் ஒப்படைத்துள்ள நிலையில் வாகனங்களை மீளப் பெற்றுக்கொள்வதற்குமேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்   


Add new comment

Or log in with...