பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி-Brazilian President Jair Bolsonaro tested positive for the COVID-19

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அந்நாட்டு தொலைக்காட்சியொன்றில் நேரலையாக இடம்பெற்ற பேட்டியில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றையதினம் (06) அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் தான் சுகவீனமுற்றதாக உணர்ந்ததாகவும், அதற்காக அன்டி பயொடிக்ஸ் (antibiotics) மருந்துகளை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி கொரோனா தொடர்பில் ஆரம்ப கட்டத்தில் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்ததோடு, கொரோனா தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனும் கொரோனா வைரஸை குறைவாக மதிப்பிடும் கருத்துகளை வெளியிட்டு வந்திருந்தார். இது தொடர்பில் பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...