தேடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரி கைது | தினகரன்

தேடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரி கைது

தேடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரி கைது-Wanted IP of PNB Arrested

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த அதிகாரியொருவரை கைது செய்வது தொடர்பில், பொதுமக்களின் உதவியை பொலிஸ் தலைமையகம் நாடியிருந்தது.

இந்நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகர் (IP) இன்று (07) கடவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பின் தற்காலிக விதிமுறை சட்டத்தின் கீழ், மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வு திணைக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...