கொவிட்-19; இதுவரையில் 888 கடற்படையினர் குணமடைவு | தினகரன்


கொவிட்-19; இதுவரையில் 888 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 கடற்படையினர் பூரண குணமடைந்த நிலையில், வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (06) வெளியேறியுள்ளனர்.

அவர்களில் இரு கடற்படையினர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் இரணவில வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, PCR பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது.  அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த மூவரும் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 888ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...