பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து

ஏறாவூர் பகுதியிலிருந்து பொகவந்தலாவை பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் குடைசாய்ந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

வாகன சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கு காரணமென தெரிவித்த நானுஓயா பொலிஸார்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர் –பி.திருக்கேதீஸ்)


Add new comment

Or log in with...