ஜூலை நடுப்பகுதியில் வெளியாகவுள்ளது Vivo Y50 | தினகரன்

ஜூலை நடுப்பகுதியில் வெளியாகவுள்ளது Vivo Y50

ஜூலை நடுப்பகுதியில் வெளியாகவுள்ளது  Vivo Y50-Vivo Y50 Set to Release in Late July

8GB RAM; 128GB உள்ளக மெமரி: 5000mAH பெட்டரி

புதுமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் Vivo Mobile வர்த்தக நாமமானது, அதன் புத்தம்புதிய மொடலான Y50 இனை இம்மாதம் நடுப்பகுதியளவில் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப நீண்ட நேரம் நிலைத்திருக்கக்கூடிய சார்ஜ் மற்றும் மிகவும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கக்கூடிய கெமரா அமைப்பு போன்றவற்றை இந்த புதிய மொடல் தன்வசம் கொண்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையில் அறிமுகமாகிய V19 மொடலைத் தொடர்ந்து Y50 மொடலானது அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. COVID-19 பரவலைத் தொடர்ந்து Vivo Mobile உள்ளுர் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஸ்மார்ட்போன் மொடல் இதுவாகும்.

ஜூலை நடுப்பகுதியில் வெளியாகவுள்ளது  Vivo Y50-Vivo Y50 Set to Release in Late July

நடுத்தர விலைப் பிரிவில் உள்ளடங்கும் இந்த ஸ்மார்ட்போன் மொடலானது, கைத்தொலைபேசியின் வாயிலாக இணையத்தில் அதிகநேரம் செலவிடும் இளம்தலைமுறையினரின் தேவைகளுக்கேற்ப விசேட விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிடுக்கான தோற்றத்துடன் கூடிய இந்த மொடலானது, தத்ரூபமான iView திரை, 8GB RAM மற்றும் 128GB உள்ளக மெமரி, சக்திவாய்ந்த 5,000mAH பெட்டரி போன்றவற்றுடன் பயனர்களுக்கு அதிவிரைவான செயற்பாட்டை வழங்குவதன் வாயிலாக, Vivo Mobile வர்த்தக நாமத்தின் அசத்தலான அம்சங்களுடன் கூடிய மற்றுமொரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனாக வாடிக்கையாளர்கள் மனங்களில் இடம்பிடிப்பது திண்ணம்.

ஜூலை நடுப்பகுதியில் வெளியாகவுள்ளது  Vivo Y50-Vivo Y50 Set to Release in Late July

கண்கவரும் தோற்றம் மற்றும் அதிவிரைவான செயற்பாட்டினைக் கொண்டுள்ள இந்த மொடலானது, இளம்தலைமுறையினரின் நவநாகரீக கலாசாரத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புத்தம்புதிய லு ளநசநைள மொடலான Y50, 13MP super wide-angle lens பிரதான கெமரா, 8MP wide-angle lens கெமரா, மற்றும் 2MP macro கெமராக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பின்புற நான்கு கெமராத் தொகுதியினைக் கொண்டுள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Super Night தன்னியக்கமான நுண்ணறிவு அம்சமானது இருளிலும் தெளிவான, தனித்துவமான அடுக்குகளைக் கொண்ட தத்ரூபமான புகைப்படங்களை எடுப்பதற்கு உதவுகிறது.

Vivo பற்றி
Vivo உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழ்வதுடன், புதுமையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் திடமாகவுள்ளது. Vivo வர்த்தகநாமமானது உலகளாவிய ரீதியில் 100 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சான்றளிக்கப்பட்டுள்ளது. Vivo உலகெங்கும் 30 க்கும் மேற்பட்ட சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதுடன், 1000 க்கும் மேற்பட்ட நகரங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்பொருள் வடிவமைப்பு தொடக்கம் மென்பொருள் உருவாக்கம் (Android based Funtouch OS) வரையான பூரணமானதும் நிலைபேறான தொழில்நுட்பத்துடனான உற்பத்திக் கட்டமைப்பினை Vivo கொண்டுள்ளது. தற்சமயம் டொங்வான், ஷென்சென், நான்ஜிங் மற்றும் சொங்கிங் ஆகிய நகரங்களிலுள்ள நான்கு தலைமையகங்களில் 20000 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. அத்தோடு, சான்டியாகோ, ஷென்சென், நான்ஜிங், பீஜிங், ஹங்சு, தைபே மற்றும் சிலிக்கன் வெலியில் உள்ள 7 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களில் 20,000 க்கும் அதிகமான பொறியியலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். டொங்வான், சொங்கிங், ஜகார்த்தா, புதுடில்லி ஆகிய நகரங்களிலும் பங்களாதேஷிலும் 5 உற்பத்தி மையங்களை Vivo கொண்டுள்ளது.  


Add new comment

Or log in with...