கோள் மண்டலம் ஜூலை 07இல் மீள் திறப்பு | தினகரன்


கோள் மண்டலம் ஜூலை 07இல் மீள் திறப்பு

கொவிட்-19 தொற்றுக் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோள் மண்டலத்தை,  இம்மாதம் 07ஆம் திகதி முதல்  மீண்டும் திறக்க  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள  அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.  

சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய, கோள் மண்டல சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளியை பேணி, அனைத்துக் காட்சிகளிலும் குறிப்பிட்டளவு பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில்   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...