தே.அ.அ. விண்ணப்பங்களை ஜூலை 17இற்கு முன் அனுப்பவும்

தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் தங்களது விண்ணப்பப்படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பப்படிவங்கள், தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பிரிவின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும். இத்தற்காலிக அடையாள அட்டைகள், தேர்தலுக்காக மாத்திரம் வழங்கப்படும். அனைத்து விண்ணப்பப்படிவங்களும் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கு முன்னர், உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அத்தோடு, தற்காலிக அடையாள அட்டைகளும் ஜூலை 29ஆம் திகதி வரை வழங்கப்படும்.  ஜூலை 29ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கும் விண்ணப்பப்படிவங்கள் செயற்படுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...