MCC மீளாய்வு அறிக்கை; தினேஷ் - அமெ. இராஜாங்க செயலாளர் கலந்துரையாடல் | தினகரன்


MCC மீளாய்வு அறிக்கை; தினேஷ் - அமெ. இராஜாங்க செயலாளர் கலந்துரையாடல்

அண்மையில் வெளியிடப்பட்ட MCC மீளாய்வு அறிக்கை தொடர்பில், அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால்  அமெரிக்க இராஜாங்கச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவும் நேற்று (29) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியதாக, வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் அவர்கள் இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.  

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இறையாண்மைக்காக தொடர்ந்து பணியாற்றுவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்தார்.

இலங்கை மக்களுடனான தனது உறவை தொடர்ந்து விரிவுபடுத்துவதாக,அமெரிக்க இராஜாங்கச்  செயலாளர் உறுதியளித்துள்ளார்.    


Add new comment

Or log in with...