கோட்டா, மகிந்தவின் ஆட்சியில் நாடு கட்டியெழுப்பப்படுகிறது

மாத்தளை மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச செயலாளர் பிரிவு தோறும் தேசிய பாடசாலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். தம்புள்ள பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் பொருளாதாரம் கல்வி, கலாசாரம், அபிவிருத்திப் பணிகள் என்பன மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம், கல்வி, கலாசார, அபிவிருத்திப் பணிகள் யாவும் உரிய முறையில் அரசாங்கத்தினால் தற்போது வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் எண்ணக்கருவில்  நாடு கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.  பாடசாலைகள் சகல வசதிகளும் கொண்ட பாடசாலையாக மாற்றியமைக்கப்படவுள்ளது.  இதனடிப்படையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள 11 செயலக பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு தேசியப் பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு சகல வசதிகளுடனும் இப் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்றார்.

மாத்தளை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...