ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு | தினகரன்


ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு

ரணில் விக்ரமசிங்கவிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு-CID Records 4Hr Statement From Former PM Ranil Wickremesinghe

- சட்ட மாஅதிபரின் உத்தரவுக்கமைய நடவடிக்கை

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்  குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில், வாக்குமூலம் பெறுமாறு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 4 பேரிடம் வாக்குமூலம் பெறுமாறு, சட்ட மாஅதிபரினால் கடந்த ஜூன் 18ஆம் திகதி, சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று (03) பிற்பகல் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள், அவரிடம் சுமார் 4 மணி நேர வாக்குமூலம் பெற்று அங்கிருந்து சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆர். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் வசந்தகுமார ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு சட்ட மாஅதிபர் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 2015 ஜனவரி 27 ஆம் திகதி பிணைமுறி ஏலம் மூலம் ரூபா 10,058 பில்லியன் பெறுமதியான திறைசேரி பிணைமுறி வழங்கியதில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக, இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைவாகவே குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...