செக் நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடைக் கொண்டாட்டம்

செக் குடியரசு தலைநகர் பரகுவில் இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்றின் பிரியாவிடைக் கொண்டாட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

சார்லஸ் பாலத்தின் மீது 500 மீற்றர் நீண்ட உணவு மேசை அமைக்கப்பட்டு சுமார் 2,000 இருக்கைகளுடனான நிகழ்வுக்கு மக்கள் வரவேற்கப்பட்டனர்.

இதில் பங்கேற்க முற்பதிவு செய்தவர்கள் சொந்தமாக உணவுப் பொருட்களை எடுத்து வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த சமூக இடைவெளியும் பேணப்படாமல் ஆடல், பாடல் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான முடக்கநிலை தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் 1,000 பேர் வரை ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கே செக் அரசு அனுமதி அளித்துள்ளது.

செக் குடியரசில் சுமார் 12,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த வாரம் அந்நாட்டில் ஏப்ரல் 8 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்சமாக 260 புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...