கஞ்சிப்பானை இம்ரானின் சிறை கூடத்தில் கையடக்க தொலைபேசி | தினகரன்


கஞ்சிப்பானை இம்ரானின் சிறை கூடத்தில் கையடக்க தொலைபேசி

கஞ்சிப்பானை இம்ரானின் சிறை கூடத்தில் கையடக்க தொலைபேசி-Mobile Phone-Charger-SIM Card Found-Kanji Paanai Imran-Cell in the Boosa Prison

கஞ்சிப்பானை இம்ரான் சிறை வைக்கப்பட்டுள்ள பூசா சிறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அவரது சிறைக் கூடத்திலிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.

பூசா சிறையின் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் (01) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், குறித்த கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், சிறை வைக்கப்பட்டுள்ள இலக்கம் 03 சிறைக் கூடத்திலிருந்து ஒரு அன்ட்ரொய்ட் வகை கையடக்க தொலைபேசி, சார்ஜர் 01, சிம் அட்டைகள் 04 ஆகியன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...