கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் | தினகரன்

கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

கொழும்பு துறைமுக ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம்-Colombo Harbour Employees Strike

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க கூட்டணியின் தொழிற்சங்க நடவடிக்கைகளை அடுத்து, கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் இவ்வாறு பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, அத்தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க கூட்டணியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், நேற்றையதினம் (01) முதல் கென்றி கிரேன்கள் (Ganty Cranes) மீது ஏறி தொடர்ந்தும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நிறுவுவதற்காக கொண்டு வரப்பட்ட கென்றி பாரம் தூக்கியை (gantry crane) குறித்த இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியே அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...