இந்து ஆலய நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இந்து ஆலயங்களின் நிருவாக சபையினர் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் நடாத்தும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்து மத ஆலயங்களை வழிபாட்டுத் தலங்களாக பயன்படுத்தும்போது பின்பற்றவேண்டிய ஒழுங்குமுறைகள், சட்டதிட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (02) நாவிதன்வெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீசன் பிரதான வளவாளராக கலந்துகொண்டு ஆலய பரிபாலனசபை நிர்வாகத்தினருக்கு விளக்கமளித்தார்.
 
இந்த நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா, மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.ஜெயராஜ், என்.பிரதாப், பிரதேச செயலகத்தின் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். சுஜீவனி மற்றும் கலாசார உத்தியோகத்தர்களான திருமதி வி.நகுலா, ஏ.எல்.எம்.சினாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
(பெரியநீலாவணை விசேட நிருபர்)        

Add new comment

Or log in with...