187 அடி உயரத்தில் போராட்டம்

கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்களை சேர்ந்த மூவர் 187 அடி உயரமான பாரம் தூக்கியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நிறுவுவதற்காக சீனாவிலிருந்து கொண்டு வந்த கென்டி பாரம் தூக்கியை (gantry crane)  விரைவாக குறித்த இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியே அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கோரிக்கைக்கு தீர்வை பெற்றுத்தரா விட்டால், உண்ணாவிரதப் போராட்டம் வரை அதனை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக, கொழும்பு துறைமுகத்தின் வர்த்தக தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமணரத்ன தெரிவித்தார். 


Add new comment

Or log in with...