நிறவெறி கோசத்தை ட்வீற் செய்த டொனால்ட் ட்ரம்ப்

வெள்ளையின அதிகாரம் பற்றி கோசம் எழுப்பும் தமது ஆதரவாளர்களின் வீடியோ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறு ட்விட் செய்த நிலையில் பின்னர் அதனை நீக்கியுள்ளார்.

புளோரிடாவில் ட்ரம்ப் ஆதரவுப் பேரணி ஒன்றிலேயே இந்த கோசம் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இது நிறவெறியை தூண்டும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுத்தன.

இதனை அடுத்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை அவசரமாக நீக்கியுள்ளார். அந்த வீடியோவில் இடம்பெற்ற ‘வெள்ளையின அதிகாரம்’ என்ற வார்த்தையை ட்ரம்ப் கேட்கவில்லை என்று; அவரின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இனவெறியை ஊக்குவிக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் மீது உள்ளது. பிரிட்டன் தீவிர வலதுசாரிகள் பகிர்ந்த கோபமூட்டக்கூடிய வீடியோவை 2017ஆம் ஆண்டு ட்ரம்ப் பகிர்ந்தார். இது அப்போதே சர்ச்சையானது.

 


Add new comment

Or log in with...