பேஸ்புக்கை புறக்கணிக்கும் நிறுவனங்கள் அதிகரிப்பு

வெறுப்புக் கருத்துகளை கட்டுப்படுத்த தவறியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பேஸ்புக் சமூக ஊடகத்திற்கு விளம்பரங்களை வழங்குவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

சிவில் உரிமைக் கூட்டமைப்பு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த பிரசாரத்தில் பேஸ்புக்கிற்கு விளம்பரம் அளிப்பதை புறக்கணிக்க பெரு நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் பெப்சிகோ நிறுவனம் பேஸ்புக் சமூகத் தளத்தில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாய் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்தத் தற்காலிக நிறுத்தம் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

பிரபல துரிய உணவு நிறுவனமான ஸ்டார் பக்ஸ் நிறுவனமும் பேஸ்புக் உள்ளட்ட சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வெளியிடுவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பேஸ்புக்கில் ஆறாவது மிகப்பெரிய விளம்பரங்கள் செய்யும் நிறுவனமாக ஸ்டார் பக்ஸ் உள்ளது.

ஏற்கனவே பென் அன்ட் ஜெர்ரிஸ், யுனிலிவர் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதை அண்மையில் நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இது பேஸ்புக்கிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Add new comment

Or log in with...