களுத்துறை நகர சபைத் தலைவருக்கு பிணை | தினகரன்


களுத்துறை நகர சபைத் தலைவருக்கு பிணை

களுத்துறை நகர சபைத் தலைவர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் (29) முன்னிலைப்படுத்தியபோது, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி, களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுத்துறை வேணன் பெனாண்டோ விளையாட்டு மைதானத்தின் பூட்டுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தமை தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் களுத்துறை நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...