12 துப்பாக்கிகளுடன் ஹோமாகமவில் ஒருவர் கைது | தினகரன்


12 துப்பாக்கிகளுடன் ஹோமாகமவில் ஒருவர் கைது

ஹோமாகம பிட்டிபன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பன்னிரண்டு ரி56 ரக துப்பாக்கிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலக குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ககன என்பவரின் உதவியாளரே  இவ்வாறு 12 துப்பாக்கிகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 729 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினரே இச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...