முகக்கவசங்களில் தேர்தல் பிரசாரம்; தவிர்க்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை | தினகரன்


முகக்கவசங்களில் தேர்தல் பிரசாரம்; தவிர்க்குமாறு கட்சிகளிடம் கோரிக்கை

தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் கண்டனம்

அரசியல்வாதிகள் சிலர் தங்களின் விருப்பு எண்களையும் கட்சி சின்னங்களையும் பொது மக்களிடையே விநியோகிக்கும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் கண்டித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க, சுகாதார அவசரகால நடவடிக்கைகளின் போது அரசியல் நன்மைகளைப் பெற முயற்சிப்பதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் அரசியல்வாதிகள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி சரியான முறையில் தேர்தல் பிரசாரத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சில தரப்பினர் தங்களது விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் முக்கவசங்களில் அச்சிட்டுள்ளதை அவதானித்தோம். இது ஏமாற்றமளிக்கிறது. சுகாதார நெருக்கடியின் போது இத்தகைய நடவடிக்கைகளை நாம் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளால் வாக்காளர்கள் திகைத்துப் போவார்கள். எனவே, வேட்பாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்றும் கூறினார்.


Add new comment

Or log in with...