தெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா

தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஐதராபாத்தின் கோஷாமஹாலில் ஜூன் 25ம் தேதி 'ஹரிதா ஹராம்' என்னும் மரம் நடும் நிகழ்ச்சியில், தெலுங்கானா டிஜிபி மகேந்தர் ரெட்டி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன், உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி பங்கேற்றிருந்தார். கடந்த 4 நாட்களாக அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அமைச்சரின் பாதுகாவலர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு முன்னதாக தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கு அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.


Add new comment

Or log in with...