திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒன்லைனில் 300 ரூபா டிக்ெகட் | தினகரன்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒன்லைனில் 300 ரூபா டிக்ெகட்

அடுத்த மாதத்துக்கு (ஜூலை) ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக திங்கட்கிழமை ரூ.300 டிக்கெட் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கோவிலில் டைம் ஸ்லாட் டோக்கன், ரூ.300 டிக்கெட் ஆகியவற்றில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதில் டைம் ஸ்லாட் டோக்கன்கள் நேரிலும், ஒன்லைன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். ரூ.300 டிக்கெட் மட்டும் ஒன்லைனில் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் அடுத்த மாதத்துக்கு (ஜூலை) ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக திங்கட்கிழமை ரூ.300 டிக்கெட் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன்கள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளிலும், அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட உள்ளன. அதில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒருநாள் முன்கூட்டியே வந்து டைம் ஸ்லாட் டோக்கனை பெற வேண்டும். இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...