பல்வேறு அழுத்தங்கள் வந்தபோதிலும் முஸ்லிம்கள் என்றும் எங்களுடன் | தினகரன்

பல்வேறு அழுத்தங்கள் வந்தபோதிலும் முஸ்லிம்கள் என்றும் எங்களுடன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி முஸ்லிம் வேட்பாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று தெஹிவளை சஹ்ரான் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரையும் படத்தில் காணலாம். (அஸ்ரப் ஏ.சமத்)

முஸ்லிம் வேட்பாளர்கள், உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை.அன்றும் எம்மோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் எம்மோடுதான் இருக்கிறார்கள். எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் அவர்கள் என்னுடன் தான் இருக்கின்றனர். அதனால் தொடர்ந்து புரியாணி, வட்டிலப்பம் கிடைத்து வந்தது. நேற்று தெஹிவளை சஹ்ரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள், வேட்பாளர்கள்  கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,..

அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவா் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கில் அமைதியான சுழநிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம்.அன்று மூதூர் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் 2 மணித்தியாலங்களுக்குள் விரட்டி கந்தளாய் துரத்திவிட்டார்கள்.அன்று நாங்கள் முஸ்லிம்களிடம் சொன்னோம். ஒரு கிழமைக்குள் உங்களை மீள முதூருக்கு குடியமார்த்துவோம் என்று.அதேபோல் புலிப்பயங்கரவாதத்தை முடித்து மீளவும் மூதூரில் முஸ்லிம்களை குடியமர்த்தினோம்.இப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான எந்தப் பிரதேசங்களுக்கும் மக்கள் எங்கும் அச்சமின்றி சென்று வரக்கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தினோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் சண்டையிடவில்லை. புலிப்பயங்கரவாதிகளுடன் தான் போரிட்டு பயங்கரவாதத்தினை அழித்து நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தினோம்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி தலைமையில் உலகில் எங்குமில்லாதவாறு பாதுகாப்புப் படையினா் பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சும் இணைந்து தான் கொடிய கோரோனா தொற்று நோயை வெற்றி கொண்டோம். அது ஏனைய நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. அந்த கெடுபிடியில் தான் முஸ்லிம்களது கொரோனா நோயளிகள் இறந்தவர்களின் உடலை புதைப்பதா அல்லது எரிப்பதா என்ற பிரச்சினை எழுந்தது.

இவ்விடயத்தினை ரவூப் ஹக்கீம் தான் பெரிது படுத்தினார். அதன் பின்னா் அலி சப்றி தலைமையில் சில முஸ்லிம் குழுவொன்று இது பற்றி என்னைச் சந்தித்து பேசினார்கள். அதனை நான் சுகாதார அமைச்சா் பவித்திரா வனினியராச்சி மற்றும் வைத்திய அதிகாரிகள் விஞ்ஞானிகள் கூடி அவர்களது தகவல் அறிக்கையின் படியே அது நடைபெற்றது. அவர்கள் எரிப்பதனையே உறுதிபடுத்தினர். அதனை மீறி அரசியல் ரீதியாக நாங்கள் அவ்விடயத்தில் கையடிக்கவில்லை என்றார்.

 

அஸ்ரப் ஏ சமத்


Add new comment

Or log in with...