வெளியேறினால் மீண்டும் இ.தொ.காவில் இடமில்லை | தினகரன்


வெளியேறினால் மீண்டும் இ.தொ.காவில் இடமில்லை

வந்து போக இது பஸ்தரிப்பிடமல்ல

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேறினால் இனி மீண்டும் உள்ளே வரமுடியாது. எல்லோரும் வந்துபோக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பஸ் தரிப்பிடம் அல்ல என காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான  ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,....

என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக பலர் கூறுகிறார்கள். என்னை அப்படி சொல்பவர்களுக்கு நான் ஒன்றை சொல்கிறேன், நான் மலையகத்தை சேர்ந்த இளைஞன். 'கருப்பையா கங்காணியின் கொள்ளுப் பேரன்' என்று கூறினார்.

மேலும், சிலர் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றனர். நான் பதவிக்காக ஆசைப்படுபவன் இல்லை.

பதவிகள் நம்மை தேடி வர வேண்டும். பதவிகளை தேடி நாம் போகக் கூடாது என்றார்.


Add new comment

Or log in with...