விகாரைக்குள் கொலை செய்யப்பட்ட 73 வயது விகாராதிபதி | தினகரன்


விகாரைக்குள் கொலை செய்யப்பட்ட 73 வயது விகாராதிபதி

விகாரைக்குள் கொலை செய்யப்பட்ட 73 வயது விகாராதிபதி-Buddhist Monk Dead Body Found-Maha Induruwa Temple

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மஹ இந்துருவவில் உள்ள விகாரையில் உள்ள விகாராதிபதி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (29) காலை விகாரையின் உள்பகுதியிலுள்ள இல்லத்தில் குறித்த 73 வயதான தேரரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (29) முற்பகல் 10.00 மணியளவில் விகாரைக்கு வந்திருந்த குழுவினரால் குறித்த சடலம் தொடர்பில் கொஸ்கொடை பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இக்கொலை எவ்வாறு இடம்பெற்றது மற்றும் சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.


Add new comment

Or log in with...