கட்டுநாயக்க விமான நிலையம்; ஆகஸ்ட் முதலாம் திகதி திறக்கும் சாத்தியமில்லை

கட்டுநாக்க விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதன் பின்னரோ மீண்டும் திறக்கப்படும் என சுகாதார துறை அறிவித்துள்ளது. 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலா பயணிக்களுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

நாட்டில் கொரோனா வைரஸ் வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

எனினும் சுற்றுலாத்துறையை பாதுகாப்பதற்காகவும், சுற்றுலாத்துறையினர் மூலம் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கும் வேறு வழிமுறைகளை பயன்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் விமான நிலையத்தை திறக்க தயாராக இருப்பதாக விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேவேளை பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் இலங்கைக்கான தமது சேவைகளை விரைவில் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர். கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக உலகளாவிய ரீதியில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இலங்கை வர தயாராக இருந்த பெருமளவு பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.   


Add new comment

Or log in with...