உலகளாவிய கொரோனா தொற்று ஒரு கோடியை கடந்தது | தினகரன்


உலகளாவிய கொரோனா தொற்று ஒரு கோடியை கடந்தது

- மரணம் 49.8 இலட்சம்

- குணமடைவு 54 இலட்சம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு  இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்று நோயில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 54 இலட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 700 இற்கும்  மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4.98 இலட்சத்தை கடந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...