பாடசாலைகளை திறக்க நடவடிக்கை | தினகரன்


பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

- முதற்கட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களுக்கு நாளை அழைப்பு

- ஜூலை 06ஆம் திகதி முதல் மாணவர்கள் அழைக்கப்படுவர்

கொவிட்-19 தொற்று நோய் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது பல கட்டங்களாக இடம்பெறும் என, கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்காக அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பிரிவினர் வழங்கிய சுற்றறிக்கை மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய, பாடசாலைகள் திறக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில், எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

 


Add new comment

Or log in with...