சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை மேலும் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை மேலும் நீடிப்பு-Driving-Licence-Validity-Period-Extended-From-Feb-16-to-Jun-30-06-Months-From-Jul-01-to-Sep-30-03-Months.jpg

➡️ மார்ச் 16 - ஜூன் 30: 6 மாதங்கள்
➡️ ஜூலை 01 - செப் 30: 3 மாதங்கள்

மார்ச் 16 முதல் செப்டெம்பர் 30 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை 3 முதல் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2020 மார்ச் 16 முதல் 2020 ஜூன் 30 வரை காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், 06 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020 ஜூலை 01 முதல் 2020 செப்டம்பர் 30 வரை காலாவதியாகும் காலத்தைக் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை 03 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 17, 2020 எனும் திகதியிடப்பட்ட 2180/26 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவல் ஆபத்தை கருத்திற் கொண்டு, காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை இரு தடவைகள் நீடிக்கபட்டிருந்தது.

2020 மார்ச் 16 முதல் 2020 ஏப்ரல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் கால எல்லை, மே 30ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக, 2020 மார்ச் 17 திகதியிடப்பட்ட 2168/8 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம், போக்குவரத்து சேவைகள் அமைச்சரினால், அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2020 ஏப்ரல் 16 முதல் 2020 மே 31 வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 2020 ஜூலை 31 வரை மீண்டும் நீடிக்கப்படுவதாக, 2020 மே 19 எனும் திகதியிடப்பட்ட 2176/6 எனும் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...