லெபனானிலிருந்து நாடு திரும்பிய 171 பேர் | தினகரன்

லெபனானிலிருந்து நாடு திரும்பிய 171 பேர்

- இந்தியாவிலிருந்து 161 பேரும், நியூஸிலாந்திலிருந்து 88 பேரும் வருகை

இலங்கைக்கு வர முடியாமல், லெபனானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 171 பேரை ஏற்றிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (26) அதிகாலை வந்தடைந்துள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1506 எனும் விசேட விமானம், இக்குழுவினரை ஏற்றிக்கொண்டு, லெபனானின் பெய்ரூட் (Beirut) நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 5.41 மணிக்கு வந்தடைந்துள்ளது.

இக்குழுவினர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 161 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம், மத்தள விமான நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்ததோடு,  நியூஸிலாந்தில் சிக்கியிருந்த 88 பேர் நாட்டை வந்தடைந்தனர். 


Add new comment

Or log in with...