சிரியாவில் இஸ்ரேல் சரமாரித் தாக்குதல்

சிரியாவின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் இரு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஈரானிய தளங்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் சலமியா, ஹாமா மாகாணத்தின் சபூரா நகரங்களில் இருக்கும் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் டெயிர் அல் சோர் மாகாணத்தில் இருக்கும் இராணுவ நிலை மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இது பற்றி இஸ்ரேலிய இராணுவம் எந்த கருத்தையும் வெளியிடுவதற்கு மறுத்துள்ளது. எனினும் 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் அங்கு இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சிரிய அரச துருப்புகள், அதன் கூட்டாளிகளான ஈரானியப் படை மற்றும் லெபனான் சியா போராட்டக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்புகளை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எனினும் இவ்வாறான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அரிதாகவே பொறுப்பேற்கின்றன.


Add new comment

Or log in with...