‘உண்மை சரிபார்த்தல்’ அம்சம் கூகுளில் சேர்ப்பு | தினகரன்

‘உண்மை சரிபார்த்தல்’ அம்சம் கூகுளில் சேர்ப்பு

தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க அல்பபட் நிறுவனத்தின் கூகுள் தேடல்தளம், தற்போது படத்தேடலுக்கும் ‘உண்மை சரிபார்த்தல்’ எனும் சோதனை அம்சத்தைச் சேர்த்துள்ளது.

அந்த அம்சம் தேடலின் ஒவ்வொரு படத்தின் அடியிலும் கிளிக் செய்யக்கூடிய பொத்தானாக இடம்பெறும்.

அல்பபட் நிறுவனம் அதன் ‘உண்மை சரிபார்த்தல்’ சோதனை அம்சத்தை முதலில் அதன் யூடியுப் தளத்தில் ஏப்ரல் மாதம் சேர்த்தது. கொவிட்–19 நோய்ப்பரவலைப் பற்றிய போலித் தகவல்கள் பரவுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்பட்டது.

அதைப் போலவே ட்விட்டர் நிறுவனமும் பேஸ்புக் நிறுவனமும் தத்தம் தளங்களில் சோதனை மென்பொருள் ஒன்றைச் சேர்த்து சந்தேகத்துக்குரிய தகவல்களைப் பற்றி எச்சரிக்கை விடுக்கும் அம்சத்தைச் சேர்த்துள்ளன.


Add new comment

Or log in with...