சியபத பினான்ஸ் பிற்ச் தரப்படுத்தலில் ‘A' நிலைக்கு உயர்வு | தினகரன்


சியபத பினான்ஸ் பிற்ச் தரப்படுத்தலில் ‘A' நிலைக்கு உயர்வு

சியபத பினான்ஸ் பிற்ச் தரப்படுத்தலில் ‘A' நிலைக்கு உயர்வு-Fitch upgrades Siyapatha Finance credit rating to 'A(lka)Stable'-Ananda Senaviratne

சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான இணை நிறுவனமான சியபத பினான்ஸ், இலங்கையின் மிகவும் நம்பகமானதொரு நிதி நிறுவனமாகும். சியபத பினான்ஸ், அண்மையில் பிற்ச் ரேட்டிங் இடமிருந்து A-(lka) சமநிலை என்ற தரத்திலிருந்து A(lka) சமநிலை என்ற நிலைக்கு தர உயர்வினைப் பெற்றுள்ளது. நிறுவனத்தின் கடன் மீள் கொடுப்பனவுகளில் காணப்பட்ட சிறந்த பெறுபேறுகள் மற்றும் தாய் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் சிறந்த பின்னணி ஆகிய காரணங்களினால் குறித்த தரம் உயர்வினை நிறுவனம் அடைந்து கொண்டது. மிகவும் கடினமான பொருளாதார சூழல் ஒன்று காணப்படும் இந்தக் காலப்பகுதியில், இவ்வாறானதொரு தரம் உயர்வை அடைந்து கொண்டமை நிறுவனத்தின் சக்தியையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், 'பிற்ச் ரேட்டிங்கிடமிருந்து தரம் உயர்த்தப்பட்ட வரிசைப்படுத்தல் ஒன்றைப் பெற்றுக்கொள்வது, வாடிக்கையாளர்கள் சியபத பினான்ஸ் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு சிறந்ததொரு சான்றாகக் காணப்படுகின்றது. 15 வருடங்கள் என்ற எமது சேவைகளைப் பூர்த்தி செய்யும் இவ்வாண்டில், இந்த விருதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றறோம். நிதிச் சந்தை என்பது, சாதாரணமாகவே ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்கும் ஒன்றாகும். கடந்த சில மாதங்களாக அது கடுமையான சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்து. இவற்றை முன்கூட்டியே அடையாளம் காண நாம் சிறந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளோம். எமது முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும், நம்பிக்கையான மற்றும் சிறந்த தரத்திலான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் நாம் எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றோம். இவற்றின் காரணமாகவே, சியபத பினான்ஸ் இவ்வாறான வெற்றிகரமானதொரு நிலையை அடைந்து கொண்டது, எமது அனைத்துச் சேவைகளையும், மேலும், எமது வாடிக்கையாளர்களை நெருங்கும் வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்" என்று கூறினார்.

சியபத பினான்ஸ் பற்றி
சியபத பினான்ஸ் நிறுவனமானது, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். அது, நாடு தழுவிய ரீதியில் தனது கிளைகளைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. பொது மக்கள் தமது வர்த்தக தொலைநோக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவி புரிதல் என்ற ஆர்வத்துடன் செயற்பட்டு வரும் இந்நிறுவனம், தொடர்ந்து, தமது கிளை வலையமைப்பை விருத்தி செய்து கொண்டும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்;தக நிறுவனங்களின் அபிவிருத்திக்காக தொடர்ந்து உதவிகளை வழங்கியும், தொழில் முயற்சியாளர்; நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தும் வருகிறது. சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான மற்றும் மிகப்பெரிய இணை நிறுவனம் ஒன்று என்ற பின்னணியையும், பாதுகாப்பையும் கொண்டு இயங்குவதானல் நிறுவனம் மேலும் வலிமையுடன் செயற்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...