தபால்மூல வாக்களிப்பு; 47,430 விண்ணப்பங்களை நிராகரித்தது ஆணைக்குழு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்குரிய விண்ணப்பங்களில் 47,430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பிற்காக 753,037 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் 7 இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் இம்முறை தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்காளர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே தகுதி பெற்றுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 74,611 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 56,438 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 54,098 பேரும் தபால் மூல வக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


There is 1 Comment

Add new comment

Or log in with...