'மிதுரு மிதுரோ' யிற்கு Pelwatte விடமிருந்து பால்மா நன்கொடை

'மிதுரு மிதுரோ' யிற்கு Pelwatte விடமிருந்து பால்மா நன்கொடை-Pelwatte Donates Milk Powder to Mithuru Mithuro Movement

முன்னணி உள்நாட்டு பால் உற்பத்தி நிறுவனமான Pelwatte நுகர்வோர் சார்ந்த பல சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், இவை கொவிட்-19  நெருக்கடிக்கு மத்தியிலும் சமூக முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களை சிறந்த மனிதர்களாக சமூகமயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமைப்பே ”மிதுரு மிதுரோ” ஆகும்.  இந்த அமைப்பானது அரசாங்க மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெல்மதுல்லை, குருவிட்ட, கம்பஹா மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள மிதுரு மிதுரோவின் நான்கு கிளைகளில் 350 க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

“ஒரு சமூகப் பொறுப்புள்ள அமைப்பாக, அவ் அமைப்பில் கீழ் தங்கியிருப்போரின் நாளாந்த பால்மா தேவை மற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஏற்பட்ட இந்த கொவிட் - 19 நெருக்கடி நிலையில் அத் தேவையை பெற்றுக்கொள்ள அவ் அமைப்பு எதிர்நோக்கிய சிக்கல்கள் தொடர்பில் Pelwatte முகாமைத்துவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, உள்நாட்டு பாலுற்பத்தி நிறுவனமென்ற வகையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கடமைப்பட்டோம்."

மிதுரு மிதுரோ அமைப்பு அங்கு தங்கியிருப்போரின் பெற்றோரின் மாதாந்த நிதி உதவியின் மூலமே இயங்குகின்றது. எனினும், மார்ச் 2020 முதல் முடக்கல் நிலை மற்றும் சமூக தொலைவை கடைபிடிப்பதற்கான அரசாங்க விதிமுறைகள் காரணமாக, அவ் அமைப்பினால் தமது நாளாந்த பால்மா தேவையான 10 கிலோ கிராமை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. இத்தகைய சூழ்நிலையில், Pelwatte  குறித்த அமைப்பின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பால்மா தொகையொன்றை நன்கொடையாக வழங்கியது.

தற்போதைய சுகாதார அச்சுறுத்தல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, Pelwatte தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதுடன், உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாட்டின் போது கடுமையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் நன்கு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிசெய்கிறது.

ஒரு பொறுப்புள்ள கூட்டாண்மை நிறுவன குடிமகனாக, Pelwatte பன்மடங்கு சமூகபொறுப்பு திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதுடன், இவை கொவிட்-19 இன் பின்னர் கணிக்கப்படும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் மந்த நிலையால் உள்நாட்டவரின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சிக்கல்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீள ஆரம்பிக்கும் இலங்கைக்கு வலுவூட்டும்.

Pelwatta எப்போதும் சமூக பொறுப்புணர்வு முயற்சிகளை தங்கள் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாகவே கருதுகிறது. முன்னைய வருடங்களில் பல சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்திருந்தது. குறிப்பாக, பதுள்ளையில் தோட்டப்புற சமூகங்களுக்காக பல சமூக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருந்தது. இலங்கையில் பால் தன்னிறைவுக்கான இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளுக்கு பங்களிக்கும் அதே வேளையில், நிறுவனம் இப் பாரம்பரியத்தைத் தொடரவும் எதிர்பார்க்கிறது.


Add new comment

Or log in with...