SLT 2020 முதல் காலாண்டு இலாபம் ரூபா 3.2 பில்லியன்; 28% வளர்ச்சி

SLT Group 1Q 2020 Operating Profits grow by 28prcnt to Rs3-2BnSLT 2020 முதல் காலாண்டு இலாபம் ரூபா 3.2 பில்லியன்; 28% வளர்ச்சி-
இ-வ: SLT தலைபர் ரொஹான் பெனாண்டோ, பிரதம நிறைவேற்று அதிகாரி கித்தி பெரேரா, பிரதான செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெனாண்டஸ்

ஸ்ரீலங்கா ரெலிகொம் பிஎல்சி குழுமம் 2020 மார்ச் 31 இல் முடிவடைந்த முதல் மூன்று மாதங்களுக்கான நிதிப் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.

மொத்த வருமானம், குறித்த காலாண்டில் 22.1 பில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 21.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 3.8% வளர்ச்சியாகும்.

சொத்துக்கள் கொள்வனவு மற்றும் முதலீடுகளில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக, செலவினங்களை பெருமளவில் குறைத்து சுமார் 5% செலவினங்களைக் கட்டுப்படுத்தி 704 மில்லியன் ரூபா சேமிப்பை நிறுவனம் மேற்கொண்டது.

புதிய SLFRS சட்டதிட்டங்களுக்கு அமைய, குறித்த காலாண்டில் மேலதிகமாக அதிகளவு பெறுமானத் தேய்வுச் செலவினங்களும், மேலதிக ஒதுக்கீட்டுத் தேவைப்பாடாக ரூபா 536 மில்லியன் ஒதுக்க வேண்டிய தேவைப்பாடும் ஏற்பட்டது. இது நிலுவையிலுள்ள கடனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டதாகும். இவை அனைத்தையும் தாண்டி குழுமத்தின் காலாண்டுக்கான செயற்பாட்டு இலாபம் ரூபா 3.2 பில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 28.6% வளர்ச்சியாகும்.

பரவி வரும் தொற்று நோயினால், இலங்கை ரூபாவில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக மொத்;தமாக அந்நியச் செலாவனியில் ஏற்பட்ட நட்டம் குழுமத்திற்கு 683 மில்லியன் ரூபாவாக இருந்தது. இது கடந்த வருடத்தின் 172 மில்லியன் ரூபா இலாபத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கணிசமான அதிகரிப்பாகும்.

உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களின் அதிகரிப்பினால் குழுமத்திற்கு நிதிச் செலவினம் 317 மில்லியன் ரூபாவினால் குறித்த காலாண்டில் அதிகரித்துள்ளது.

குழுமத்தின் நிகர இலாபம் குறித்த காலாண்டில் 1.9 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டதோடு, இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 14.6% வீழ்ச்சியைக் காண்பித்துள்ளது. இது பிரதானமாக கடன் செலுத்தப்படாத கடனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்தல், அந்நியச் செலாவனியில் ஏற்பட்ட நட்டங்கள் மற்றும் அதிகரித்த நிதிச் செலவினங்கள் என்பனவற்றினாலாகும். குறித்த காலப்பகுதியில் SLT குழுமம் மொத்தமாக 4.4 பில்லியன் ரூபா நேரடி மற்றும் மறைமுக வரிகளை இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது.

குறித்த காலாண்டின் இறுதிக் காலப்பகுதி கோவிட் 19 தொற்று நோய் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் சுகாதாரத் தேவைப்பாடுகள் மற்றும் வீடுகளில் இருந்து பணியாற்றும் தேவைப்பாடுகள் என்பனவற்றின் அவசியம் ஏற்பட்டது.

SLT குழுமம் தேசியத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் என்ற வகையில் பெருமளவில் அத்தியாவசிய சேவைகளுக்கு சேவை வழங்குநராக செயற்படும் நிறுவனம் என்ற வகையில் சகல துறைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வர்த்தகத் தொடர்ச்சித் திட்டங்களை செயற்படுத்தியது.

இதற்கு மேலதிகமாக SLT குழுமம் பல்வேறு விதமான ரெலிகொம் பொதிகளை குறைந்த செலவினங்களிலும் மேலும் சில இலவச தரவுகளையும் குறிப்பிட்;ட சில பிரிவினருக்குப் பெற்றுக் கொடுத்தது.

பெறுபேறுகள் பற்றிக் கருத்து தெரிவித்;த குழுமத்தின் தலைவர் திரு. ரொஹான் பெர்னாண்டோ, ‘கோவிட் 19 தொற்று நோய் காலப்பகுதியில் குழுமத்தின் தேசிய பொறுப்பை நன்கு அறிந்து விளங்கி எந்தவிதமான தடங்கல்களும் இல்லாமல் சகல துறையினருக்கும் தமது சேவைகளை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுத்தமை தொடர்பாக நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

குழுமம் SLT மற்றும் மொபிட்டல் ஆகிய இணைப்புக்கள் மூலம் இலவசமாக Unlimited Data வசதிகளைப் பெற்றுக் கொடுத்து, குடும்பங்களையும் நண்பர்களையும், உறவினர்களையும் ஒன்றாக இணைத்து வைத்தது.

இப்போது நாங்கள் இவ்வாறான தொற்று நோய் காலப்பகுதியின் போது அதற்கு முகம் கொடுக்க முழுமையான முறையில் தயாராக இருக்கும் அதேவேளையில் இதன் மூலம் ஏற்படக்கூடிய புதிய தொழில் வாய்ப்புக்களில் புதிய டிஜிட்டல் உற்பத்திகளையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தி அவற்றின் பெறுபேறுகளை அடைந்து கொள்ளம் தயாராக இருக்கின்றோம்’ என்று கூறினார்.

குழும நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கித்தி பெரேரா கூறுகையில், ‘கோவிட் 19 தொற்று நோய் காலப்பகுதியிலும் எமது நிதிப் பெறுபேறுகள் தொடர்ச்சியாக சிறந்த நிலைமையையே வெளிப்படுத்தியுள்ளது. பல்வேறு விதமான ஆர்வம் காட்டுவோருக்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருந்ததாலும் கூட, இக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

குறைவடைந்த வருமானம் காரணமாக பல்வேறு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட கட்டணங்களைச் செலுத்;த முடியாத நிலைமைகளின் போதும், அரசாங்கத்தின் உத்;தரவுக்கு அமைய எந்தவிதமான இணைப்புக்களையும் துண்டிக்காது சேவைகளை தொடர்ச்சியாகப் பெற்றுக் கொடுத்ததோடு, வருமானங்களை அறவிட்டுக் கொள்வதிலும் நிறுவனம் பல சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளது.

SLT யின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. பிரியந்த பெர்னாண்டஸ் கூறுகையில், ‘தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் துரிதப்படுத்;தப்பட்ட பைபர் விரிவுபடுத்தல் வேலைத் திட்டம் காரணமாக, SLT தேசிய பைபர் மயப்படுத்தல் செயற்றிட்டம் மூலம் நாட்டில் பைபர் விருத்தி மேலும் அதிகரிக்கப்படுவதோடு, இதன் ஊடாக வாடிக்கையாளர்கள், வர்த்தகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அதிக பலன்களை அடைந்துகொள்ளும் வாய்ப்புக் காணப்படுகின்றது.

அவர்களுக்கு Ultra-high speed புரோட்பான்ட் வசதிகளை மிகக் குறைந்த பின்னடைவுகளுடன் High Definition ஓடியோ மற்றும் வீடியோ டிஜிட்டல் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வர்த்தகப் பெயரான ‘Xyntac’ ஆனது, சர்வதேச சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

அதற்கமைய ‘Xyntac’ மூலம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சர்வதேச சந்தையின் தேவைப்பாடுகளுக்குரிய குரல், தரவு மற்றும் இணைப்பு பதிகளை புதிய டிஜிட்டல் சேவைகள் மூலம் அதிகரித்துப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. 


Add new comment

Or log in with...