சுரக்‌ஷா விண்ணப்பத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பவும்

சுரக்‌ஷா விண்ணப்பத்தை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பவும்-Submit Suraksha Insurance Application to Sri Lanka Insurance Corporation

மாணவர்களுக்காக, கல்வி அமைச்சினால் கொண்டு வரப்பட்ட சுரக்‌ஷா காப்புறுதி திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனதிற்கு அனுப்புமாறு, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்ட அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் சுரக்ஷா மாணவர் காப்பீட்டு திட்டமானது, இவ்வருடம் மே 31 ஆம் திகதி முதல்,  இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (SLIC) கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதோடு, அது தொடர்பான பிரதிபலன்களையும் அந்நிறுவனம் தொடர்ச்சியாக வழங்கும் எனவும், அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகங்களில் அல்லது நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்பலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை (011 2357357) தொடர்பு கொள்வதன் மூலமே, 011 2319015, 011 2319016, 011 2319017 ஆகிய சுரக்‌ஷா சேவை தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவே தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...