கொவிட் -19 சிகிச்சையளிப்பு சுகாதார சேவையாளர்களுக்கு இலவச விடுமுறை பொதி

Cinnamon Hotels & Resorts வழங்குகிறது

கொவிட் 19நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட சுகாதார சேவை பணியாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் Cinnamon Hotels & Resorts இலவச விடுமுறை பொதியொன்றை வழங்கியுள்ளது.  

‘Cinnamon சுவவிரு பிரனாம’ என பெயரிடப்பட்டுள்ள இப்பொதி தொடர்பான அறிவிப்பு John Keells Holdings நிறுவனத்தின் தலைவர் நிஷாத் பாலேந்திரவினால் (16) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடம் கையளிக்கப்பட்டது. கொவிட் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை பணிக்குழாமினருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் சுகாதார அமைச்சின் தெரிவின்படி 1,000 பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.  

அவர்களுக்கு Cinnamon Hotels & Resorts கீழ் உள்ள 09ஹோட்டல்களில் ஒன்றில் அனைத்து வசதிகளுடனும் இரண்டு இரவுகள் இலவசமாக தமது விடுமுறையை களிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.  

இப்பொதி 2020 ஜுலை 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30 வரை செல்லுபடியாகும். Cinnamon Grand Colombo, Cinnamon Lakeside Colombo, Cinnamon Red Colombo, Cinnamon Bey Beruwala, Cinnamon Wild Yala, Cinnamon Lodge Habarana, Cinnamon Citadel Kandy, Habarana Village by Cinnamon மற்றும் Trinco Blu by Cinnamon ஆகிய 9 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவுசெய்ய முடியும்.   


Add new comment

Or log in with...