2015 கடத்தல் தொடர்பில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை | தினகரன்

2015 கடத்தல் தொடர்பில் ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

டிபென்டர் வாகனமொன்றில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு ஜூலை 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரட்ண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதன் காரணமாக மேல் நீதிமன்ற நீதவான் இவர்களுக்கு 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் அதே தினத்தில் விசாரணை நடத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

இதற்கு முன், ஹிருணிகா பிரேமசந்திர தவிர இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றத்தை ஒப்புக்ெ காண்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கிருந்தது.

முறைப்பாட்டாளரான அமிலா பிரியங்கர, 2015 டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொடைபகுதியில் கறுப்புநிற டிபெண்டர் ரக வாகனத்தில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.


Add new comment

Or log in with...