ஒஸ்கார் விழா ஒத்திவைப்பு | தினகரன்

ஒஸ்கார் விழா ஒத்திவைப்பு

2021ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது வழங்கும் விழா கொரோனா வைரஸ் தொற்றால் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவை அடுத்த ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும் திரைப்படங்கள் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்ற கெடுவும் அடுத்த ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் மூன்று முறை ஒஸ்கர் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு வெளிவர இருந்த பல திரைப்படங்கள் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...