உயிரிழந்த புலனாய்வு கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு | தினகரன்


உயிரிழந்த புலனாய்வு கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு

கடந்த 11ஆம் திகதி இரவு, கொழும்பு, தும்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் யொமால்  அளகப்பெரும, பொலிஸ் சார்ஜெண்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இம்மாதம் 09ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 78 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற  பிரதான சந்தேகநபரை குறித்த பணத்துடன் கைது செய்வதற்காக அரச புலனாய்வுச் சேவையில் இணைக்கப்பட்ட பயிற்சி உத்தியோகத்தரான உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிளும் உதவியிருந்தனர்.

இதற்கமைய, பொலிஸ் சேவையில் நற்பெயரை தேடித் தந்த இவரது சிறப்பு செயல் காரணமாக பதில் பொலிஸ் மா அதிபரினால்,  அவர் சார்ஜெண்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


Add new comment

Or log in with...