மாணிக்கக்கல் தருவதாக பல இலட்சம் மோசடி செய்தவர் கைது | தினகரன்


மாணிக்கக்கல் தருவதாக பல இலட்சம் மோசடி செய்தவர் கைது

மாணிக்கக்கல் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்த குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி, கந்தானை பொலிஸ் பிரிவில், மாணிக்கக்கல் பெற்றுத் தருவதாக கூறி, 14 இலட்சம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் நீண்ட நாள் விசாரணையை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், மஹபாகே பொலிஸ் பிரிவில் நேற்று (08) பகல் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிகதலுபொத பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (09) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...