பஸ் வண்டி குடைசாய்ந்து விபத்து | தினகரன்


பஸ் வண்டி குடைசாய்ந்து விபத்து

ஹட்டன், டெம்பஸ்டோன் பிரிவிற்குச் செல்லும் தனியார் பஸ் வண்டியொன்று,  வீதியை விட்டு விலகிச் சென்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஹட்டன் - கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் டெம்பஸ்டோன் சந்தியில் இன்று (06) மதியம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  இன்று காலை முதல் இப்பகுதியில் மழை பெய்து வருவதால், குறித்த பஸ் வண்டி வீதியை  விட்டு விலகிக் குடை சாய்ந்துள்ளது

ஆகையால், மலையக பகுதியிலுள்ள வாகனச் சாரதிகள்  தங்களது வாகனங்களை மிக அவதானமாக  செலுத்துமாறு, ஹட்டன் பிரதேசத்திற்கு  பொறுப்பான பொலிஸ் வலய அதிகாரி சூலனி வீர ரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(மஸ்கெலியா தினகரன் விசேட  நிருபர் செ.தி. பெருமாள்)


Add new comment

Or log in with...